Wednesday, June 16, 2010

கழிப்பறையில் அழைப்பு

சாதாரண தொலைபேசியால் தான்  தொல்லை என்றால் இப்பொழுது செல்லுலர் தொலைபேசிகள் வேறு வந்து விட்டன.

எவரைப் பார்த்தாலும் கைகளுக்குள் கைக்குண்டு வைத்திருப்பது போலப் பற்றிக் கொண்டு வீரநடை போடுகிறார்கள்.
கையில் இருக்கும், இல்லாவிட்டால்
ஷேட் பொக்கற்றுக்குள்ளால் எட்டிப் பார்க்கும்.
அல்லது இடுப்பில் தொங்கும்.


ரெஸ்ராரன்டில் நண்பர்களுடன் குளிர் ஊட்டப்பட்ட பியர் அடித்துக் கொண்டிருந்த கந்தசாமியாருக்கு முடுக்கிக் கொண்டு வந்தது.

கொஞ்சம் தாமதித்தால் முட்டி வழிந்து மார்பிள் தரையில் சிந்தி
தன்னையும் மற்றவர்களையும் சறுக்கீஸ் விளையாட வைத்துவிடும். 

பயம் கிளம்ப கழிவறையைத்
தேடிக் கண்டு பிடித்தார்.

முதல் கூடு மூடிக்கிடந்ததால் அடுத்ததை நோக்கி விரைந்தார்.
நல்ல காலம் அதற்குள் யாருமில்லை.
உள்ளே நுழைந்த அவர் சிப்பை திறந்து
வெளியில் எடுத்து,
பாரம் இறக்கத் தொடங்கினார்.


"எப்படிப் போகுது"
அமானுசக் குரல் எழுந்தது.

யாராவது எட்டிப் பார்க்கிறார்களா என்ற திகைப்பு எழுந்தது,
சுற்றும் முற்றும் பார்த்தார். யாருமில்லை.

குரல் முதலாவது கூடத்திலிருந்து வருவது புரிந்ததும் திகைப்பு அடங்கியது.

ஆயினும் பொதுக் கழிப்பறையிலிருந்து
மற்றவர்களுடன் பேசுவது
இவருக்கு உவப்பானதல்ல.
வெட்கமாகவும் கோபமாகவும் இருந்தது.


"என்ன சத்தத்தைக் காணவில்லையே"
மற்றவர் திரும்பவும் கேட்டார்.

"கேடுகெட்ட மனிதன்.
என்ன பேசுவது என்று தெரியாமல்
கதைக்கிறான்."
கந்தசாமியாருக்கு என்ன மறுமொழி சொல்வது
என்று தெரியவில்லை.

"நல்லாப் போகுது"
எரிச்சலை அடக்கிக் கொண்டு பதிலளித்தார்.
உண்மையிலேயே எரிச்சல் இன்றி
குழாயைத் திறந்தது போல
பீறிட்டுப் பாய்ந்து கொண்டிருந்தது.

"எனக்கு வேலை முடிஞ்சுது.
நான் புறப்படப் போறன். நீயும் வாறியா"
மற்றவர் கேட்டார்.

இவருக்கு இன்னமும் அரைவாசி மீதமிருந்தது.
முழுவதையும் இறக்கினால்தான்
நிம்மதியாகும்.
அதோடை இவன்ரை பேச்சுத் தொல்லையையும்
வெட்ட நினைத்தார்.

"எனக்கு முடியவில்லை.
நான் முடிச்சுக் கொண்டு வாரன் நீ போ"
இவர் பதிலளித்தார்.

"மடையன்"
பக்கத்துக் கூட்டிலிருந்து கோபமாகக் குரல் எழுந்தது.

இதைக் கேட்டதும் கந்தசாமியாரின்
கையும் மனமும் சேர்ந்து பதறின.

"டார்லிங்!
...நான் உன்னோடை செல்லில் பேசுறதுக்கு
 பக்கத்து யூரினலில் நிற்பவன்
தானே மறுமாழி சொல்லுறான்....
இடியட்"

விசயம் புரிவதற்கிடையில் 
நடுங்கிய கை விட்டுப் போனதால் 
கந்தசாமியாரின் ரவுஸ்சர் 
நனைந்துவிட்டது.

0.0.0.0.0.0

Post Comment

12 comments:

நாடோடி said...

அய்யோ‌!! அய்யோ‌ ...சார் சூப்ப‌ர்.. சிரிப்பு தாங்க‌ முடிய‌லை.. ந‌ல்ல‌ விவ‌ரிப்பு..

PRAKASH said...

சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது டொக்டர்.

வந்தியத்தேவன் said...

ஹாஹா பாவம் அவர் நல்ல காலம் வேறை இடக்குமுடக்கான கேள்வி கேட்டிருந்தால் கந்தசாமியார் எல்லாவற்றையும் உளறியிருப்பார்.

துளசி கோபால் said...

:-)))))))))


ஆனால் இதை வேறெங்கோ படிச்சுருக்கேன், சிலகாலம் முன்பு.

Senthu VJ said...

நல்லா இருக்கு, ஹா..ஹா.

ப்ரியமுடன்...வசந்த் said...

பொது நாகரீகம்?????

பிறிந்தன் பரமேஸ்வரன் said...

நல்ல வேளை.. இன்னும் நான் இப்படி ஒரு இடத்தில் அம்பிடவில்லை... நல்ல கடி டாக்டர்..!!

பிறிந்தன் பரமேஸ்வரன் said...

நல்ல வேளை.. இன்னும் நான் இப்படி ஒரு இடத்தில் அம்பிடவில்லை... நல்ல கடி டாக்டர்..!!

இரா.சிவக்குமரன் said...

haahaa haa

Dr.எம்.கே.முருகானந்தன் said...

நீங்கள் சொல்வது சரி துளசி கோபால். நீங்களும் ஈமெயில் 'கடி ஜோக்கு'களில் படித்திருக்கலாம். எனக்கு ஈமெயில் வந்தது இது.

"Jackson was moving towards California. On his way to the city, he stopped at a local market and went to the washroom. The first stall was taken, so he went in the second stall.
Soon, he heard a voice from the next stall... "Hi there, how is it going?"
That was okay, but Jackson was not a person to strike conversations with strangers in washrooms on the side of the road.
He did not know what to say, but he awkwardly said, "Not bad..."
Then the voice said: "So, what are you doing?"
Jackson thought that a bit weird, but said, "Well, I'm going back to California..."
Then, he heard the person say: "Look I'll call you back. Every time I ask you a question, this idiot in the next stall answers me."

நமக்கு ஏற்றவாறு எழுதியுள்ளேன்.

ச.இலங்கேஸ்வரன் said...

இந்த அனுபவம் எனக்கும் உண்டு.

நிலாமதி said...

ஹா ஹா ஹா.....

Post a Comment

என்ன சொல்லப் போறீங்க? சொல்லாமல் போயிடாதீங்க