எத்தகைய நோயாளிகள் சத்திரசிகிச்சை செய்வதற்கு இலகுவானவர்கள் என்பது பற்றி தம்மிடையே கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டிருந்தனர்.
'எனக்கு எக்கவுண்டன்ட் நோயாளிகளை சத்திரசிகிச்சை செய்யப் பிடிக்கும். சத்திரசிகிச்சை மேசையில் அவர்களை வெட்டித் திறக்கும் போது அவர்களது உள்ளுறுப்புகள் யாவும் எண்ணிக்கை இடப்பட்டு ஒழுங்காக இருக்கும்' என்றார் முதல் நிபுணர்.
'ஆனால் நீங்கள் எலக்ரீசியனை சத்திரசிகிச்சை செய்யவில்லைப் போலிருக்கிறது. நம்பர் ஏன்? அவர்களது உறுப்புகள் யாவும் வெவ்வேறு நிறங்களால் இலகுவாகப் பிரித்தறியும் வகையில் இருக்கும்' என்றார் இரண்டாமவர்.
மூன்றாவது சத்திரசிகிச்சை நிபுணருக்கு பொறுக்க முடியவில்லை.
'நீங்கள் என்ன மடைத்தனமாகக் கதைகிறீர்கள். நூலகர்களுக்கு இணை கிடைக்கவே கிடையாது. ஒவ்வொரு உறுப்பும் எழுத்து ஒழுங்கில் (Alphabetical Order) தெளிவாக இருக்கும்.'
'கட்டடப் பணியாளர்கள்தான் மிகச் சிறந்தவர்கள். அவர்கள் புரிந்துணர்வு மிக்கவர்கள். சத்திரசிகிச்சை முடியும்போது சில உறுப்புகள் மிஞ்சிக் கிடந்தால் அதை தவறாக எடுக்க மாட்டார்கள். புரிந்து கொள்வார்கள்.
உறுப்புகள் வெடித்தாலும் பிஞ்சாலும் அஞ்சமாட்டார்கள். பிளாஸ்டர் பண்ணி மூடி மறைத்து விடலாம்.
முன்னர் சொன்னதற்கு அதிகமான நேரத்தை எடுத்துக் கொண்டாலும் விளங்கிக் கொள்வார்கள்.' என்றார் மற்றவர்.
ஐந்தாமவர் தனது கருத்தை வெளிப்படுத்தியவுடன் மற்றவர்கள் எல்லாம் வாயடங்க வேண்டியதாயிற்று.
'அரசியல்வாதிகளைப் போல சத்திரசிகிச்சைக்கு இலகுவானவர்கள் ஒருவருமே இருக்க முடியாது...
... சத்திரசிகிச்சை கட்டிலில் கிடத்தி அவர்களைத் திறந்தால்
அங்கு உணவுக் குழாய் இருக்காது.
விதைகள் கிடையாது.
இருதயம் இருக்கவே இருக்காது.
முள்ளந்தண்டின் சுவடே காணப்படாது.
மண்டை ஓட்டைத் திறந்தால் அங்கு மூளை இருந்த அறிகுறியே இருக்காது.
இரண்டே இரண்டு உறுப்புகள் மட்டும் ஓயாது இயங்கிக் கொண்டே இருக்கும்.
ஒன்று வாய்.
மற்றது குதம்.
சத்திரசிகிச்சையின் போது ஏதாவது தவறிழைத்தாலும் பயமில்லை.
ஏனெனில் அவர்களது வாயும் குதமும் ஒன்றுக்கு மற்றொன்று மாற்றீடு செய்யக் கூடியவையாகும்.'
இது சத்திரசிகிச்சை நிபுணர்களின் தேர்வு.
தேர்தல் விரைந்து வருகிறது.
தேர்தல் எத்தனை வேண்டுமானாலும் வரலாம்.
ஆனால் தேர்தலில் தேர்ந்தெடுக்க உங்களுக்குத் தேர்வு இல்லை.
எல்லா வேட்பாளர்களுமே ஒரே ரகம்தான்.
கடைசி சத்திரசிகிச்சை நிபுணருக்கு கிடைத்த மாதிரி.
(இணையத்தில் படித்ததற்கு சற்று கைச்சரக்கு சேர்த்தது)
ஞானம் சஞ்சிகையில் ஏப்ரல் மாத இதழில் நான் எழுதியதின் மறுபிரசுரம்.
0.0.0.0.0.0
0.0.0.0.0.0.0
இவர்களைத் தவிர வேறு விதமான சத்திரசிகிச்சை நிபுணர்களும் இருக்கிறார்கள்.
இவர் சற்று தீவிரமான சத்திர சிகிச்சை நிபுணர். நோயின் சிறு சுவடும் இருக்கக் கூடாது என்ற ஆர்வத்தில் வெட்டி அகற்றுவார்.
அந்த நோயாளிக்கு நோய் சற்று முற்றிவிட்டது என்ற தீர்மானம் அவருக்கு.
எனவே நோயின் கூறுகள் உள்ள அனைத்தையும் மிகுந்த அக்கறையோடு வெட்டி அகற்றினார்.
அந்த நோயாளிக்கு நோய் சற்று முற்றிவிட்டது என்ற தீர்மானம் அவருக்கு.
எனவே நோயின் கூறுகள் உள்ள அனைத்தையும் மிகுந்த அக்கறையோடு வெட்டி அகற்றினார்.
முடிவில் அவர் கட்டிலைப் பார்த்த போது நோயாளி இருந்த சுவடே இல்லையாம்!.
0.0.0.0.0.0
மற்றவர் இன்னும் தீவிரமானவர். ஆபரேசன் தியேட்டருக்குள் வந்த உடனேயே கடமை உணர்வுடன் கத்தியைத் தூக்கி வெட்டத் தொடங்கிவிட்டார்.
கூட இருந்த உதவி டொக்டருக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது.
நீங்களே பாருங்கள்.
0.0.0.0.0.0
இவர் கடமை உணர்வு மிக்கவர். ஒவ்வொரு நோயையும் மிகவும் நுணுக்கமாகவும் சந்தேகத்திற்கு இடமின்றி ஆராய்ந்து பார்த்தே முடிவுக்கு வருவார்.
இவர் நோயை நிர்ணயிப்பதற்கு முன்னர் நோயாளி பரலோகம் போய்விடுவரே என நீங்கள் சந்தேகப்பட்டால் அதுவம் நியாயம்தான்.
0.0.0.0.0.0





5 comments:
ஹா.............ஹா............
நகைச்சுவை நன்று.
Dr, can you create a facebook group and share your articles there also. That is easy for all to follow your post? Or with your permission shall i create a group for your articles?
Thakyou
Dr, can you create a facebook page for your articles. That would be nice to follow your articles. Or with your permission shall i create a facebook page for your medical articles.
Thanks for you suggestion Kavinjan. Soon I shall do it soon
நன்றி Facebook ல் எனது சில குழுமமாக எம்.கே.முருகானந்தன் படைப்புவெளி
இணைப்பிற்கு
http://www.facebook.com/home.php#!/?sk=2361831622
Post a Comment
என்ன சொல்லப் போறீங்க? சொல்லாமல் போயிடாதீங்க