Friday, July 24, 2009

ஓரு நேர மருந்து

அது ஒரு அமைதியான வெள்ளிக்கிழமை மாலை நேரம். பொதுவாகவே டிஸ்பென்சரியில் சனக்கூட்டம் குறைந்த ஆரவாரமில்லாத நாள்.

அப்பொழுது ஆச்சி ஒருத்தி, பரபரப்புடன் எனது அறைக்குள் நுழைந்தாள்.

"இப்படி இருங்கோ இருங்கோ ஆச்சி"

நான் சொல்ல - அவளோ! இருப்பதற்கு கூட அவகாசம் இல்லாததுபோல்

"செவ்வாய்க்கிழமை ஐயாட்டை இந்தப்பிள்ளைக்கு மருந்து எடுத்தனான், கொஞ்சம் கூட சுகமில்லை. அடிக்கொருதரம் வயித்தை முறுக்கிக் கொண்டு வயித்தாலை போகுது. இரத்தமும் சீதமாகவும் போகுது, பச்சை பச்சையாகவும் போகுது. ரா முழுக்க நாங்களும் கண்மூடவில்லை. பிள்ளையும் தூங்கயில்லை, பச்சைத்தண்ணி கூட குடியாதாம், துவண்டு போச்சுது|"
பொரிந்து தள்ளினாள்.

எனக்கு வியப்பாக இருந்தது! இவ்வருடம் தொற்று நோயாகப் பரவி வரும் இந்த வயிற்றுளைவு நோயைக் கொண்டு வரும் கிருமியையும் அதனைக் குணமாக்கும் மருந்தும் விஞ்ஞான பூர்வமாக கண்டறியப்பட்டுள்ளது.

அது மட்டுமன்றி, நோயாளிகளுக்கும் வைத்தியம் செய்யப்பட்டு வெற்றியளித்துள்ளது.

எனவே இக்குழந்தைக்கும் நோய் குணமாகாதது எனக்கு வியப்பாக இருந்தது.

எனது வைத்தியம் எங்கே பிழைத்தது? ஏன் பிழைத்தது?என யோசித்தேன்.

குழந்தையை மீண்டும் பரிசோதித்து, நோயை திரும்பவும் நிச்சயப்படுத்திக் கொண்டேன்.

பிள்ளையின் பொதுவான உடல் நிலையும் ஆபத்தான நிலையில் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன்.

"அண்டைக்கு தந்த மருந்திலை ஏதும் மிச்சம் கிடக்கோ? காட்டுங்கோ பாப்பம்" என்று கேட்டேன்.

"இஞ்சார் அப்படியே கிடக்கு" என்று சொல்லி பையுக்குள் கிடந்தவற்றை எடுத்து மேசை அள்ளிப் போட்டாள்.

மருந்துகளைப் பார்த்தபொழுது சரியான மருந்துகள்தான் கொடுக்கப் பட்டிருந்தது நிச்சயமாயிற்று.

அப்பொழுதுதான் அந்த விசயம் பட்டென என் மனதுக்குப் பிடிபட்டது.

மருந்துகள் பிள்ளைக்கு ஒழுங்காக கொடுக்கப்படவில்லை. ஒரு நேர மருந்து மாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. மிகுதி மருந்துகள் அப்படியே கிடந்தன.

ஆச்சிமேல் எனக்கு கோபம் கோபமாக வந்தது.

"மருந்துகளை ஒழுங்காக் கொடுத்தாலல்லோ நோய் மாறும், ஒரு நேர மருந்து தானே குடுத்திருக்கிறியள் மிச்சமெல்லாம் அப்படியே கிடக்குது. பின்னை எப்படி பிள்ளைக்கு சுகமாகும்" கோபமாகக் கேட்டேன்.

ஆச்சி அமைதியாகச் சொன்னாள். "வழக்கமாக இப்படித்தானே, ஐயாட்டை மருந்தெடுத்து கொண்டுபோய், ஒரு நேரம் குடுத்தாலே சுகமாகிப் போகும் ஐயாடை கைராசி அப்படி.

..இந்தமுறையும் அப்படித்தான் ஒரு நேர மருந்து பருக்கினனான் ஆனால் சுகமாகவில்லை."

எனக்கு கோபமும், சிரிப்பும் கலந்து வந்தது. எனது தலையை எங்காவது கொண்டு போய் முட்டி உடைக்கலாம் போலிருந்தது.

************************
சிரித்திரன் இதழில் 1985 அளவில் எழுதப்பட்ட இக்கட்டுரை, பின்னர் ஒரு டொக்டரின் டயறி நூலின் முதற் கட்டுரையாக வெளியானது

Post Comment

6 comments:

பாலா... said...

ஐய்யா. சிரிச்சி மாளலை. ஆனா இப்படியும் ஆளுங்க இன்னமும் இருக்காங்க.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

கருத்திற்கு நனறி பாலா. இன்னமும் இவ்வாறு சொல்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள். ஆனால் இது எழுதப்பட்டது 1985 ல்.

PRAKASH said...

கிழிஞ்சுது போங்க. இப்ப எனக்கு வயிறு வலிக்குது.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

நன்றி பிரகாஸ்

Shan Nalliah / GANDHIYIST said...

WE TAMILS SHD REMOVE IGNORANCE,DISUNITY,JEALOUSY,DOMINANCE,MARGINALISATION,ANGER,FEAR,REVENGE,CORRUPTION FROM US!
THANKS DR.MKM! SOME OF OUR PEOPLE
NEVER FOLLOW RULES/REGULATIONS/DISCIPLIN/ORDER!
FIRST WE SHD IMPROVE OUR PEOPLE IN MANY AREAS!

Dr.எம்.கே.முருகானந்தன் said...

எமது குறைபாடுகளை நன்கு புரிந்து சொல்லியிருக்கிறீர்கள் நன்றி Shan Nalliah / GANDHIYIST ஐயா

Post a Comment

என்ன சொல்லப் போறீங்க? சொல்லாமல் போயிடாதீங்க